ஆலிவ் ஆயில் – அழகுப் பராமரிப்பு

ஆலிவ் ஆயில் அழகுப் பராமரிப்பு

100 கிராம் (109 ml) ஆலிவ் ஆயிலில் இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள்:

100 கிராம் ஆலிவ் ஆயிலிலிருந்து கிடைக்கும் சக்தி: 885 kcal

கொழுப்பு: 100 கிராம்

சாசுரடேட்கொழுப்பு : 14 கிராம்

மோனோ- சாசுரடேட்கொழுப்பு : 75 கிராம்

பாலி – சாசுரடேட்கொழுப்பு: 11 கிராம்

ஒமேகா – 3 < 1.5 கிராம்

ஒமேகா – 6 3.5 – 21 கிராம்

புரத சத்து – 0 கிராம்

வைட்டமின் E – 14 mg (93%)

வைட்டமின் K – 62 மைக்ரோ கிராம் (59%)

ஆலிவ் ஆயிலின் தனித் தன்மை அதன் சுவையும் மணமும் தான். இதன் காரணமாகவே அமெரிக்காவின் பிரதான சமையல் எண்ணையாக ஆலிவ் ஆயில் இருக்கிறது. இந்த எண்ணையில் பல ரகங்கள் இருப்பதால் எந்த எண்ணையை வாங்குவது என்று குழப்பம் வரும். முதலில் என்னென்ன வகைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டு, எதற்கு உபயோகிக்கப் போகிறீர்கள் என்றும் ( சமையல்/ அழகு) தீர்மானித்துக் கொண்டு பிறகு வாங்குவது நல்லது.

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில் என்பதுதான் தூய்மையானது; நிஜமாகச் சொல்லவேண்டும் என்றால் இந்த ரகம் ஆலிவ் பழச் சாறு. எந்த விதக் கலப்பும் இல்லாதது. அதனால் அது இயற்கையான ஆலிவ் ருசியுடன் இருக்கும். இதனை சூடாக்காமல் உணவுகளில் பயன்படுத்தினால் இதன் ஊட்டச்சத்து முழுவதும் நமக்குக் கிடைக்கும். காய்கறி சாலட் மேல் ஊற்றலாம்; பரிமாறுவதற்கு முன் செய்யப்படும் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு இந்த எண்ணெய் ஏற்றது இல்லை. அதிக சூட்டில் இந்த எண்ணெய் தன் இயற்கைத் தன்மையை இழந்து விடுகிறது.

ரிபைன்ட் ஆலிவ் ஆயில் என்பது விர்ஜின் ஆயிலின் கலப்பட ரகம். சார்கோல் (மரக்கறி) மற்றும் பல இரசாயனக் கலவைகள் சேர்க்கப்பட்டு வடிகட்டப்பட்டு தயாரிக்கும் ஆயில் இது.

சாதாரணமாக நாம் வாங்கும் ஆலிவ் ஆயில் என்பது ரிபைன்ட் ஆலிவ் ஆயில் மற்றும் விர்ஜின் ஆயில் இரண்டும் சேர்ந்த கலவை.

நீங்கள் ஆரோக்கியத்திற்காக ஆலிவ் ஆயிலை வாங்க விரும்பினால் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில் தான் சிறந்த தேர்வு. ஒரு விஷயம்: இந்த ஆயிலின் கசப்பு சுவை உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். சமீபத்தில் தயார் செய்யப்பட்டதா என்று பாட்டிலின் மேல் உள்ள லேபிளைப் பார்த்து வாங்கவும்.

சருமப் பாதுகாப்பும் பராமரிப்பும் :

சருமப் பாதுகாப்பிற்காக பயன்படுத்த விரும்பினால் அதற்கும் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில் தான் சிறந்தது. ஏனென்றால் அது ரசாயனக் கலப்படம் இல்லாதது. சருமத்திற்கும் நல்லது. குளிக்கும் போது தண்ணீரில் ஆலிவ் ஆயிலுடன் சில துளி லாவண்டர் எசென்ஷியல் ஆயிலையும் சேர்த்து குளிக்கலாம்.

கடும் கோடையில் வெய்யலினால் சருமம் வறண்டு, கறுத்துக் காணப்படும். ஆலிவ் ஆயில் உங்கள் சருமத்தை எல்லாவிதத்திலும் பாதுகாக்கும். ஆலிவ் ஆயிலைத் தேய்த்துக் குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், மேல் தோல் பளபளப்பாகவும் எண்ணைப் பசையுடனும் பொலிவாக காட்சி அளிக்கும். சோப் கண்டுபிடிப்பதற்கு முன்பே பல ஆயிரம் வருடங்களுக்கு முன் எகிப்தியர்கள் ஆலிவ் ஆயிலை தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆலிவ் ஆயிலுடன் சோடா ஆஷ் கலந்து உருவானதது தான் முதல் ஆலிவ் சோப்.

நம் உடம்பில் தினம் தினம் புது செல்கள் உருவாகி பழைய செல்கள் உதிருகின்றன. சிறிது சர்க்கரையும் ஆலிவ் ஆயிலும் கலந்து முகத்தில் தேய்த்தால் மிகுதியான இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். உடலின் மற்ற பகுதியில் ஆலிவ் ஆயிலும் கடல் உப்பும் கலந்து தேய்க்கலாம்.

இப்படிச் செய்தபின் வெறும் ஆலிவ் ஆயிலை அல்லது நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் லோஷனுடன் ஆலிவ் ஆயிலைச் சேர்த்து முகத்திலும் உடலிலும் தடவினால் மேனி மெருகு ஏறும். நம் உடலில் இயற்கையாக சுரக்கும் சீபம் என்ற எண்ணைபசையைப் போலவே இருப்பதால் ஆலிவ் ஆயில் நம் உடலால் சுலபமாக உறிஞ்சப் படுகிறது. சருமத் துளைகளை அடைத்துக் கொள்ளுவதில்லை. சருமத்தின் எண்ணைப் பசையைப் பாதுகாப்பதுடன் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. மனித சருமத்திற்கு மிக உகந்ததாகவும் செயல் படுகிறது.

கூந்தலுக்கு ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் கூந்தல் வலுவானதாகவும், அடர்த்தியாவதுடன் கூந்தல் செழுமையாகவும் காட்சி தரும். ஆலிவ் ஆயில் உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனராகவும், பொடுகுத் தொல்லை தீரவும் உதவும்.

உபயோகிக்கும் முறை:

முதலில் ஷாம்பூ போட்டுக் கூந்தலை நன்றாக அலசவும். பின் ஆலிவ் ஆயில் மற்றும் தண்ணீர் சம அளவு எடுத்துக்கொண்டு கூந்தலிலும் மயிர்கால்களிலும் மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடங்கள் கழித்து மறுபடி ஷாம்பூ போட்டுக் கூந்தலை கழுவவும்.

ஆலிவ் ஆயில் கண்களுக்கு:

கண்களுக்குப் போடும் மேக்கப்பை அகற்ற ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். சிறிய அளவு பஞ்சு எடுத்து அதில் ஆலிவ் ஆயிலை சில துளிகள் விட்டு மிருதுவாக நிதானமாக கண்களைச் சுற்றி துடைத்து மேக்கப்பை அகற்றுங்கள். தொடர்ந்து பயன்படுத்தும்போது கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களும், சுருக்கங்களும் மறையும். கண்களும் புத்துணர்வு பெறுகின்றன.

விரல் நகங்கள் பராமரிப்பு:

உங்கள் விரல் நகங்களும் சுற்றியுள்ள சருமமும் வறண்டு காணப்படுகின்றனவா? சில துளி ஆலிவ் ஆயிலை நகங்களைச் சுற்றித் தடவுங்கள். நகங்களும் நகத்தைச் சுற்றியுள்ள பகுதியும் செழிப்பாகவும் பளபளப்பாகவும் மாறும்.

கால் பராமரிப்பிற்கு ஆலிவ் ஆயில் :

அழகு பராமரிப்பு நிலையங்களுக்குப் போகாமல் வீட்டிலே இதோ ஒரு எளிய பெடிக்யூர்:

3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் பிரவுன் ஷுகர், ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு இவற்றைக் கலந்து கொள்ளவும். முதலில் காலை நன்றாகக் கழுவி சுத்தமான துணியினால் ஒத்தி ஈரப் பசை இல்லாமல் துடைக்கவும். பிறகு மேற் சொன்ன கலவையை பூசி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். குளிர்ந்த நீரை விட்டுக் காலைக் கழுவவும். மறுபடியும் ஆலிவ் ஆயிலை பூசவும். உங்கள் காலா என்று ஆச்சரியப் படுவீர்கள்.

குழந்தை பிறந்தபின் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்க:

சம அளவு ஆலிவ் ஆயில், கோகோ பட்டர் (cocoa butter) எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து சுருக்கம் இருக்குமிடத்தில் தினமும் தடவவும்.

இன்னொரு விதம் :

1/2 கப் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில்

1/2 கப் ஆலோ வெரா (சோற்றுக் கற்றாழை) ஜெல்

4 வைட்டமின் ‘இ’ ஆயில் காப்ஸ்யூல் (காப்ச்யூலைத் திறந்து கொள்ளவும்)

6 வைட்டமின் ‘எ’ ஆயில் காப்ஸ்யூல் ( காப்ச்யூலைத் திறந்து கொள்ளவும்)

மேற் சொன்னவற்றை எல்லாம் கலந்து பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.

சுருக்கங்களின் மீது பூசுவதற்கு முன் இந்தக் கலவையை சற்று சூடாக்கிவிட்டு பூசவும். இதை தினசரி செய்து வந்தால் சுருக்கங்கள் மறையும்.

ஆலிவ் ஆயில்

 

சருமப் பாதுகாப்புக்கு சில எண்ணெய்கள்

published in a2ztamilnadunews.com

15 thoughts on “ஆலிவ் ஆயில் – அழகுப் பராமரிப்பு

  1. வாருங்கள் DD!
   உண்மைதான் விலையைக் கண்டுதான் யோசனை செய்ய வேண்டியிருக்கிறது.

 1. நான் எடுத்துக்கொள்ளும் சில உணவுகளில் ஆலிவ் கண்டிப்பாக இடம்பெறும்

  அதன் அருமை – பெருமை !

  தொடர வாழ்த்துகள்…

  1. வாருங்கள் சேக்கனா!
   அவை என்னென்ன உணவுகள் என்று ஒரு பதிவு எழுதுங்களேன். எல்லோருக்கும் பயன்படும்.

 2. ஆலிவ் ஆயில் ஆரோக்கியத்திற்கு ஆதாரம் என்று தெரியும்.
  ஆனால் இவ்வளவு அழகு குறிப்புகளா?
  கண்டிப்பாக உபயோகித்து நம்மை செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டியது தான்.

  1. வாருங்கள் ராஜி!
   எல்லோருக்குமே செம்மை படுத்திக் கொள்ள ஆசை இருக்கிறது. ஆனால் விலை தான்…..
   சமையலில் அதன் வாசனை இந்திய சமையலுக்கு சரிவராது என்கிறார்கள்.
   ரொம்பவும் சுட வைக்க கூடாது என்கிறார்கள்.
   இதெல்லாம் தான் இந்த ஆயில் நம்மிடையே சகஜமாக பயன்படுத்தாதன் காரணம்.

 3. எல்லாம் நல்லாதான் இருக்குங்கம்மா…. அதோட விலைதான் அன்றாட பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லைங்கம்மா,,,,,

  1. வாருங்கள் எழில்!
   ரொம்பவும் நிஜம். அதன் விலை தான் தயங்க வைக்கிறது.

 4. ஆலிவ் ஆயில் அருமை பெருமை அழகுக் குறிப்புக்கள் மிக அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் ரஞ்சனி

 5. குழந்தையின் கன்னங்களில் பொரிப்பொரியாக ஏற்படுவதை எவ்வாறு சரிசெய்வது? ஒன்பது மாதக் குழந்தைக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாமா?

 6. அய்யா எனக்கு கிடைத்த ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்படி அதன் பெயர் Bilginoglu edible pure olive oil என்று உள்ளது

 7. எனக்கு முகத்தில் பருவினால் ஏற்பட்ட குழி தழும்புகள் உள்ளது
  இப்பொழுது புதியதாக பருக்கள் வேறு வந்துள்ளது ஒரு வாரமாக
  எலுமிச்சை சாறை உபயோகித்தேன் அது சரியாக வில்லை இப்பொழுது
  ஆலிவ் ஆயில் வாங்கிருக்கேன்
  இன்னும் 15 நாட்களில் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது
  இரண்டு மாதங்களில் திருமணம்
  நடைபெற உள்ளது
  ஆலிவ் ஆயில் தினமும் இரவு முகத்தில் தேய்த்து படுத்தால் பலன் கிடைக்குமா

  ஏற்கனவே எண்ணெய் பசை சருமம்

  1. நிச்சயம் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம். உடனடியாக உங்களுக்கு பலன் தெரியாமல் போனாலும், நாள்பட பலன் கிடைக்கும்.
   உங்களது வயதில் எல்லோரும் எண்ணைப்பசை சருமம் தான் இருக்கும். இதுதான் இயற்கையானது. உங்கள் சருமத்தைக் காப்பாற்ற இயற்கை தரும் பாதுகாப்பு இந்த எண்ணெய் பசை சருமம்.

   அதிகம் எண்ணையில் பொறித்த உணவுகளை சாப்பிடாதீர்கள். துரித உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

   திருமண நல்வாழ்த்துகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s