பற்பசையின் பல விதப் பயன்பாடுகள்


பற்பசை எதற்கு பயன்படும்? என்ன கேள்வி இது? சின்னக் குழந்தையைக் கேட்டாக்கூட சொல்லிவிடும் – பற்களை சுத்தம் செய்ய என்று! மிகவும் சரி. ஆனால் எனக்கு வந்த இமெயிலில் பற்பசையின் உபயோகத்தைப் பற்றி படு ஆச்சர்யமான விஷயங்களை சொல்லி இருந்தார் அதை அனுப்பிய நண்பர். அதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

நம்மைப் பொறுத்தவரை பற்பசை நம் பற்களை துலக்கும்; பளபளப்பாக்கும்; கிருமிகள் அண்டாமல் பாதுகாக்கும்; கறைகளைப் போக்கும்; பற்களின் எனாமலை புதிப்பித்து பாதுகாக்கும். இவற்றைத் தவிர பற்பசையின் சுத்தப்படுத்தும் தன்மை பல்வேறு பொருட்களிலும் பல ஆச்சர்யங்களை நிகழ்த்தும்!

நம் முத்துப் பற்களை வெள்ளைவெளேரென்று ஆக்கும் பற்பசை வீட்டில் இருக்கும் பாத்திரம் பண்டங்களையும் பளபளப்பாக்கும். சின்ன சின்ன காயங்களை ஆற்றி இதம் தரும். கறைகளையும், வேண்டாத துர் நாற்றங்களையும் கூட விரட்டி அடிக்கும். ஆனால் ஜெல் இல்லாத பற்பசை மட்டுமே இந்த அதிசயங்களைச் செய்யும். நம் பற்களில் குழிகள் வராமல் காத்து, நம் சுவாசத்தை புத்துணர்வாக்கும் பற்பசை செய்யும் அற்புதங்களைப் பார்க்கலாமா?

 1. பூச்சிக் கடியா? கொப்புளங்களா? அல்லது புண்ணா? நம் மிருதுவான சருமத்தை ஒரு வழி பண்ணும் இவற்றின் மேல் ஒரு சொட்டு பற்பசையை பூசுங்கள்.பொதுவாக இந்தகைய காயங்கள் ஒருவித அரிப்பை உண்டு பண்ணும். சில சமயம் நீர் கசியவும் செய்யும். நம் சூப்பர் பற்பசை இந்தப் புண்களை உலர்த்துவதுடன், அரிப்பு மற்றும் வீக்கத்தையும் போக்கிவிடும். இரவு நேரத்தில் தடவிக் கொள்ளுவது நல்லது.
 2. நெருப்புக் காயங்கள்: சிறிய நெருப்புக் காயங்கள் மேல் பற்பசையைத் தடவும் போது எரிச்சல் நீங்கி குளுமை ஏற்படுகிறது. நெருப்புக் காயம் பட்டவுடனே பற்பசையை இதமாகத் தடவுவதால் நீர் கோர்த்துக் கொள்ளாமலும், காயம் திறந்து கொள்ளாமலும் இருக்கும்.
 3. முகத்தில் ஏற்படும் மருக்களை குறைக்க, முழுமையாக மறைக்க வைக்க இரவு நேரத்தில் சிறிய அளவில் துளி பற்பசையைப் பூசுங்கள். காலையில் முகத்தைக் கழுவுங்கள்.
 4. பற்களை மட்டும்தான் பற்பசைகொண்டு துலக்க வேண்டுமா? நமது விரல் நகங்கள் கூட இனாமலினால் ஆனாதுதான். சுத்தமான, பளபளப்பான, உறுதியான (பற்களுக்கு மட்டுமல்ல,) நகங்களுக்கும் கூட பற்பசையை பயன் படுத்தலாம். பல் துலக்கும் பிரஷ் கொண்டு நகங்களின் அடிப்புறத்திலும், நகங்களின் நுனிகளிலும் நன்றாக தேய்க்கவும்.
 5. தலைக்குப் போடும் ஜெல் தீர்ந்து விட்டதா? ஜெல் இருக்கும் பற்பசையைக் கொண்டு உங்கள் அழகிய கூந்தலை படிய வைக்கலாம். தலைக்குப் போடும் ஜெல் மற்றும் பற்பசையில் இருக்கும் ஜெல் இரண்டுமே ஒரே விதமான நீரில் கரையக் கூடிய பல்படிப் (பாலிமர்) பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.
 6. வெங்காயம், பூண்டு நறுக்கும் போதும், மீனை சுத்தம் செய்யும் போதும் நம் கைகளில் ஒருவித துர்நாற்றம் வீசும். கைகளையும் விரல் நகங்களையும் பற்பசை கொண்டு தேய்த்துக் கழுவவும். கைகள் கம கம!
 7. துணிகளிலும் உங்கள் வீட்டு வரவேற்பறையில் விரித்திருக்கும் தரை விரிப்புகளிலும் ஏற்பட்டிருக்கும் கரைகளுக்கும் பற்பசை ஒரு சிறந்த கரை நீக்கியாகும். துணிகளில் ஏற்பட்டிருக்கும் கரைகளின் மேல் நேராகவே பற்பசையை தடவி அழுத்தமாக கரை நீங்கும் வரை பிரஷ் செய்து வழக்கம் போல் துவைக்கலாம். ஒரு சிறிய எச்சரிக்கை: கலர் துணிகளில் வெள்ளை நிறப் பற்பசையை பயன்படுத்தும் போது சில சமயங்களில் சாயம் வெளுக்கக் கூடும். தரை விரிப்பின் மேலும் பற்பசையைத் தடவி பிரஷ்ஷினால் தேய்த்து பிறகு அலசவும்.
 8. காலணிகள்(ஷூக்கள் ) அழுக்காகி விட்டனாவா? கவலை வேண்டாம். பற்பசையை காலணிகளின் மேல் அழுக்கான பகுதிகளின் மேல் தடவி நன்றாக தேய்த்து துடைத்து விடவும். உங்கள் பற்களுக்கு சமமாக உங்கள் லெதர் காலணிகளும் ஜொலிக்கும்.
 9. வெள்ளி பாத்திரங்கள் பளபளக்க: பற்பசையைத் தடவி ஒரு இரவு விட்டுவிடவும். ஒரு சுத்தமான துணியினால் காலையில் துடைத்து விடவும். வெள்ளிப்  பாத்திரங்கள் புதிது போல பப்பள பளபள!
 10. அடுத்தாத்து அம்புஜத்தின் வைரத் தோடு பளபளக்கும் ரகசியம் என்ன தெரியுமா? தன் பற்களை மட்டுமல்லாது வைரத்தோடுகளையும் மாமி பற்பசை கொண்டே விளக்குகிறார். இங்கும் ஒரு சிறு எச்சரிக்கை: முத்துத் தோட்டிற்கு பற்பசை ஆகாது. முத்து நிறம் மங்கி கெட்டுப் போய்விடும்.
 11. கீறல் விழுந்த CD, DVD க்களை சிறிதளவு பற்பசை தடவித் துடைக்கலாம். இந்த முறை அவ்வளவாக வெற்றி என்று சொல்ல முடியாது. அதனால் யோசித்துச் செய்யுங்கள். சிறிய மேலோட்டமான கீறல்களுக்கு பரவாயில்லை.
 12. பியானோ வாசிப்பவரா நீங்கள்? பியானோவின் கீபோர்டு மேல் படிந்திருக்கும் அழுக்கை பற்பசை கொண்டு துடைக்கலாம். ஈரத்துணியில் பற்பசையை எடுத்துக்கொண்டு கீபோர்டு மேல் தடவவும். இன்னொரு ஈரத் துணியினால்துடைத்து விடவும்.
 13. குழந்தைகளின் பால் பாட்டிலிலிருந்து ஒருவித பால் வாசனை வரும். சிறிதளவு பற்பசை, நீர், பாட்டில் பிரஷ் கொண்டு நன்றாக அலம்பவும். கவனமாக நிறைய தண்ணீர் விட்டு பலமுறை கழுவவும்.
 14. இஸ்திரி பெட்டியின் அடியில் துருப் பிடித்துப் போயிருக்கிறதா? பற்பசையில் இருக்கும் சிலிக்கா துருக் கறைகளை அகற்றிவிடும்.
 15. நீச்சல் வீரர்கள், ஆழ் கடலில் நீந்துபவர்கள் கண்களில் அணியும் காகிள்ஸ் (goggles) ஏற்படும் பனிப் படலத்தை (fog) போக்க பற்பசையை பயன்படுத்தலாம். சிறிது பற்பசையை இரண்டு லென்ஸ்களின் மேலும் தடவி நன்றாக நீரில் அலசவும். வாவ்! காகிள்ஸ் சுத்தம் செய்யவென்றே விற்கும் ஜெல் வேண்டவே வேண்டாம். அதிகமாக தேய்க்க வேண்டாம். லென்ஸ்களில் கீறல் விழக்கூடும்.

சரி அம்மணி, எல்லாம் சொல்லி விட்டீர்கள், பற்களைத் தவிர இதையெல்லாம் சுத்தம் செய்ய எத்தனை கிலோ பற்பசை வாங்குவது? யார் வாங்கிக் கொடுப்பார்கள்? பற்பசை விலை தெரியுமா? என்று கேட்கிறீர்களா? எஸ்கேப்!!!

published in a2ztamilnadunews.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s