Uncategorized

நான் ஒரு முழுமையான இந்தியன்!

நான் ஒரு முழுமையான இந்தியன்!                                                 

“தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு”

இது தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த பாடல். சமீபத்தில் எனக்கு வந்த ஈமெயில் இந்தியர்களின் தனித் தன்மையை விவரித்து இருந்தது. நமது ஒவ்வொரு செய்கையிலும் “நான் ஒரு பக்கா இந்தியன்” என்று பறை சாற்றும் படி நடந்து கொள்ளுகிறோம் என்கிறது இந்த ஈமெயில். கொஞ்சம் வேடிக்கை கொஞ்சம் வருத்தம் எல்லாம் கலந்த ஒரு கலவையாக இருந்த அதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

v  நமது உணவுகள் பெரும்பாலும் பூண்டு, வெங்காயம், தக்காளி இவையெல்லாம் சேர்த்து செய்யப்பட்டவை.

v  இரண்டு பிரம்மாண்டமான சூட்கேஸ்களுடன் விமான நிலையத்தில் நின்று கொண்டிருப்பவர் கட்டாயம் இந்தியனாகத்தான் இருக்க முடியும்!

  •  விருந்துகளுக்கு எப்பவுமே ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தாமதமாகப் போவது; அதைப்பற்றி ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது; இதெல்லாம் சகஜம் என்பது  இவையெல்லாம் இந்தியர்களுக்கே உரிய சுபாவம்!

Reuse, Recycle என்பதை மிகவும் மதிப்பவர்கள் நாம் தான்!

v  நமக்கு வரும் தபால்களில் இருக்கும் – தபால் அலுவலகத்தில் முத்திரை குத்த மறந்த தபால் தலைகளை உரித்து வேறொரு தபாலில் ஒட்டி அனுப்புவதில் நமக்கு வரும் சந்தோஷம்.. அடடா அலாதி தான்!

v  பரிசுப் பொருட்களை சுற்றிவரும் கலர் காகிதம், பரிசுப் பொருட்களை உள்ளடக்கிய கிப்ட் பாக்ஸ் ஆகியவற்றை திரும்பவும் (reuse) பயன்படுத்துவதில் நமக்கு பேரானந்தம். உணவுப்பொருட்கள் சுற்றி வரும் அலுமினியம் ஃபாயில் பேப்பர்களையும் விடுவதில்லை நாம்!

v  நம் இல்லங்களில் நடக்கும் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், நமது திருமண ஆண்டு விழா போன்றவற்றில் நமக்குப் பிறர் கொடுக்கும் பரிசுப் பொருட்களை மற்றவருக்கு பரிசாகக் கொடுப்போம்! (recycle!!)

v  சமைக்கும் உணவின் மிச்சம் மீதிகள் குட்டிக் குட்டிக் கிண்ணங்களில் குளிர் சாதனப் பெட்டியில் அடைக்கலம் புகும். (reuse!)

v  எங்கெல்லாம் ‘வெளியிலிருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது’ என்று போட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் கட்டாயம் சிற்றுண்டிகளை எடுத்து போவோம்!

v  ஒருவரது வீட்டிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பியபின், அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ஒரு மணி நேரம் பேசுவோம்.

v  நமது காரில் நம் வீட்டில் உள்ள அனைவரையும் திணித்து கொண்டு பிரயாணம் செய்வோம்.

v  புதிதாக வாங்கிய பொருட்களின் மேலுள்ள பிளாஸ்டிக் கவர்களை எடுக்கவே மாட்டோம்; அது டீ.வீ. ரிமோட், வீ.சீ.ஆர், தரை விரிப்பு, அல்லது புது சோபா எதானாலும் சரி;

v  நண்பர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட வேண்டாம் என்று சொல்லும் அதே தந்தை, தாய் வேறு சில விஷயங்களை ‘உங்கள் மாமா என்ன நினைப்பார்களோ, அத்தை என்ன நினைப்பார்களோ’ அதனால் நீங்கள் செய்யக் கூடாது என்பார்கள்.

v  புதிதாக வாங்கி ஷோகேஸில் அடுக்கி இருக்கும் பீங்கான் காப்பி கோப்பைகள் நமது உபயோகத்திற்கு அல்ல; என்றோ வரப் போகும் ஸ்பெஷல் விருந்தாளிக்கு! அவர் வராமலே கூடப் போகலாம்!

v  மளிகை சாமான்கள் வரும் பிளாஸ்டிக் கவர்கள் அடுத்த நாள் குப்பை பை யாக மாறும்;

v  சமையல் அறையில் இருக்கும் ஜாடிகள், பிளாஸ்டிக் உபகரணங்கள், குட்டிக் கிண்ணங்கள் எல்லாமே எதோ சாமான்கள் வாங்கும் போது இலவசமாகக் கிடைத்தவை!

v  நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ வெளியில் சாப்பிடப் போனால் யார் பில் கொடுப்பது என்பதற்கு கட்டாயம் ஒரு சண்டை நடக்கும்.

v  உங்களுக்கு 40 வயதானாலும் அப்பா அம்மாவுடன் இருப்பதையே விரும்புவீர்கள்; அவர்களும் அப்படியே!

v  எப்போது நீங்கள் வெளியூர் போனாலும், காரிலோ, பஸ்ஸிலோ, ரயிலிலோ, விமானத்திலோ எதில் பிரயாணம் செய்தாலும் குறைந்த பட்சம் 5 பேராவது வழி அனுப்ப வருவார்கள்!

v  நம் பெண்ணாக இல்லாத பட்சத்தில், யாருடைய பெண் யாருடன் ஓடிப்போனாள் என்பதை அறிவதிலும், அதை ஊர் முழுக்க பரப்புவதிலும் நாம் தான் உலகின் நம்பர் ஒன்!

v  தூர பிரதேசங்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் தான் தொலை பேசுவீர்கள்.

v  நீங்க வெளியூரில் இருக்கும்போது உங்கள் தாய் தந்தை தொலைபேசினால், நடு இரவானாலும் ‘சாப்பிட்டாயா?’ என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும்!

v  என்னதான் தொலைபேசி தகவல் நுட்பம் முன்னேறி இருந்தாலும், வெளிநாட்டு அழைப்பு என்றால் உங்கள் தாய் தந்தை தொண்டை கிழிய கத்தி பேசுவார்கள்!

v  பேரம் பேசுவதில் தனி இன்பம் நமக்கு! பேரம் பேசாமல் ஒரு குத்தூசி கூட வாங்கமாட்டோம்!

v  சோபா அழுக்காகக் கூடாது என்பதற்காக அதன் மேல் பெட் ஷீட்டை போட்டு வைப்போம்!

v  நீர் குடிக்கும் ‘கிளாஸ்’ ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்தது!

v  ஒரு திருமணம் என்றால் குறைந்த பட்சம் 600 பேராவது வர வேண்டும்; இல்லையென்றால் அது பெரிய அவமானம் என்று கருதுவீர்கள்.

v  நமக்கு முன்  க்யூவில் எத்தனை பேர் நின்று கொண்டிருந்தாலும் அவர்களைத் தாண்டிப்  போவது நமக்கு கை வந்த கலை! க்யூவில் நிற்கும் அனைவரும் வேலை இல்லாதவர்கள்; நமக்கு மட்டுமே காலம் பொன்னானது!

v  நீங்கள் இதுவரை பார்த்திராத வயதானவர்களை uncle, aunty என்று அழைப்பீர்கள்!

v  உங்கள் பெற்றோர்கள் யாருடனாவது இரண்டு நிமிடங்கள் பேசும்போது தான் உங்களுக்கே தெரியவரும், அந்த ‘யார்’ உங்களின் தூரத்து உறவினர் என்று!

நம்மைப் பற்றி நமக்கே தெரியாத இவை தான் நம்மை ‘இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறேன்’ என்று சொல்ல வைக்கிறது.

Be proud to be an Indian!

 

 

published in a2ztamilnadunews.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s