கடவுளுடன் ஒரு உரையாடல்

கடவுளுடன் ஒரு உரையாடல்

கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?

மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?

கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.

கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.

மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.

கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.

மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.

கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.

மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?

கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.

மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?

கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று – இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.

மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?

கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.

மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்……

கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.

மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?

கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.

மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?

கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.

மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?

கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.

மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.

கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.

மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.

கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.

மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?

கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.

மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?

கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.

மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?

கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.

மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?

கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் ‘இல்லை’ என்றும் இருக்கலாம்;

மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.

கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!

published in oorooo.com

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில், மங்கல வாழ்த்துப்பாடலில் வரும் வரிகள் இவை. சந்திரன், சூரியன், மழை முதலான இயற்கை வளங்களை துதித்து விட்டு பிறகு சிலப்பதிகாரக் கதை சொல்லுகிறார் அடிகள். இயற்கை வளங்கள் நமக்கு இறைவன் தந்த வரப் பிரசாதங்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் சக்தி மனித குலத்திற்கே ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் என்றும் சொல்லலாம். இந்த உண்மையை நன்கு உணர்ந்தே இளங்கோவடிகள் முதலில் இவற்றை வணங்கிவிட்டு தன் காப்பியத்தை ஆரம்பித்தாரோ?

இயற்கை தனக்குள் என்றும் வற்றாத பல வளங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.  சூரியன், நீர் மற்றும் காற்று முதலியவைகளிலிருந்து நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்வது இப்போது பல நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடாகையாலே சூரிய சக்தியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம். நம் நாட்டில் பல இடங்களிலும் மின்சார தடை அமலில் இருக்கிறது. பல தொழில்கள் இந்த மின்சாரத் தடையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. வரும் காலங்களில் மின்சாரப் பற்றாக்குறை அதிகமாகும் என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரே தீர்வு சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பதுதான்.

நம் நாட்டில் சுமார் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான  சூரிய சக்தியைக் கொண்டு  ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில்  ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் இது வரை உபயோகிக்கிறோம்.  உண்மையில் இந்த சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம்.  வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இவ்வளவு இருந்தும், மக்களிடையே  சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது  பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. வீட்டில் சோலார் தகடுகளை (solar panels) அமைத்து மின் விசிறி, கணணி, மின் விளக்குகள், வாஷிங் மெஷின்,  ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம். சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும், நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான்.

தற்சமயம், பல தனியார் நிறுவனங்களும் அரசுடன் சேர்ந்து மக்களிடையே இந்த சூரிய சக்தியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அதன் பயனாக பல கிராமங்களும் மின் ஒளியைப் பெற்றுவருகின்றன. சூரிய ஒளி கொண்டு கிடைக்கும் மின் சக்தி பம்ப் செட்டுகளில் இருந்து தண்ணீர் இறைக்கவும் வீடுகளுக்கு மின் ஒளி கொடுக்கவும் பயன் படுகிறது.

சோலார் பெனல்களை அமைப்பது எப்படி?

முதலில் இப்போது நீங்கள் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவில் எத்தனை பங்கு சூரிய சக்தி மூலம் பெற விரும்புகிறீர்கள் என்று தீர்மானியுங்கள். மின் விளக்கு, மின் விசிறி  இவற்றுக்கு மட்டும் போதுமா? அல்லது முழு வீட்டுக்கும் சூரிய சக்தியினால் மின்சார சக்தி வேண்டுமா?  உங்களது தேவையின் அளவைப் பொறுத்து சோலார் பெனல்களை அமைக்க வேண்டும். இந்த சோலார் தகடுகள் சூரிய சக்தியை இழுத்து அதை DC மின்சாரமாக மாற்றுகிறது. இதை AC மின்சாரமாக மாற்ற ஒரு இன்வர்டர் (inverter ) வேண்டும். வீடுகளில் சோலார் தகடுகளை அமைக்க அரசு மான்யம் 50 சதவிகிதம் கிடைக்கிறது.

வீடுகளின் மேல் மாடியில் இந்த சோலார் தகடுகள் அமைக்கப்படுகின்றன. சூரிய சக்தியானது சோலார் தகடுகளில் உள்ள பாட்டரிகளில் சேமிக்கப் படுகிறது. சுமார் 65 சதுர அடி இடம் இருந்தால் போதும். இந்த சோலார் தகடுகளைப் பராமரிப்பதும் எளிது. அவ்வப்போது சுத்தமாகத் துடைத்தால் போதும். சோலார் தகடுகளில் போடோவோல்டிக் (Photovoltaic) பாட்டரிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். சோலார் தகடுகள் சூரிய ஒளியை நேரடியாக இழுத்து நவீன தொழில் நுட்ப முறையில் மின் சக்தியாக மாற்றி பாட்டரிகளில் சேமித்து வைக்கின்றன. வீடுகளில் மின்தடை ஏற்படும்போது பயன் படுத்தப் படும் இன்வர்டர் 3  மணி நேரம் மட்டுமே மின்சக்தியைக் கொடுக்கும். ஆனால் சோலார் சாதனங்களை நமக்குத் தேவையான அளவில் அமைப்பதன் மூலம் அதிக நேரம் மின்சக்தியைப் பெறலாம்.

சோலார் சக்தியின் நிறைகள்:

  • சூரிய ஒளியால் பெறப்படும் மின்சக்தியால் விண்கலங்களும் எரிசக்தி பெறுகின்றன. இதை ஒரு மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம். மின்தந்திகளை அமைத்து வழங்கப்படும் மின்சக்தியை விட இந்த முறை மிகவும் குறைந்த செலவில் செய்யப்படுகிறது.
  • சோலார் மின் சக்தித் துறையில்  தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொழில் நுட்பம் மூலமாக மழைக்காலங்களிலும் மின் சக்தி கிடைக்க வழி செய்யப்படுகிறது.
  • சுற்றுச் சூழலுக்கு ஏற்றது.
  • வீட்டின் மேல் புறம் சோலார் தகடுகளை அமைப்பதால், இவற்றிற்கென்று தனியாக இடம் தேவை இல்லை.
  • காற்றாலை அல்லது மற்ற இடங்களில் மின்சாரம் தயாரிக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் இதில் இல்லை.

சோலார் சக்தியின் குறைகள்:

  • ஆரம்பகட்டச் செலவுகளுக்கு அதிக முதல் தேவை.
  • சூரிய சக்தி தேவை என்பதால் பகல் பொழுது மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.
  • வானிலை மாறுதல்கள் சோலார் தகடுகளை பாதிக்கலாம்.
  • நகரங்களில் அமைக்கப்படும் சோலார் தகடுகள் சுற்றுப்புற மாசுகளினால் பாதிக்கப்படலாம்.

சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் இந்த மனித சாதனையால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன; சுற்றுச் சுழலுக்கு மாசு ஏற்படாத பசுமையான எரிசக்தி கிடைக்கிறது. இந்த அறிய கண்டுபிடிப்புக்காக மனிதனையும், அதற்குத் தேவையான வெப்பத்தைக் கொடுத்துக் காக்கும் சூரியனையும் வாழ்த்துவோம்!

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!

published in a2ztamilnadunews.com

Toothache


Dental cavity is the most common cause for a toothache.
Some bacteria in our mouth changes simple sugars into acid. This acid mixes with saliva and softens and dissolves the
outer layers of the tooth thus forming cavity. Small particles of food we eat settles in the cavities and cause aching pain.
If the pulp is injured severely, the pulp tissue dies and dental abscess occurs. There may be a gum blister near the affected tooth.
Treatment:

 If the cavity is small and not very deep, dental filling is done. Bigger cavities require a crown. Root canal treatment is done
when the cavity penetrates and injures the pulp. Sometimes extraction of the affected tooth is also necessary.  After the root canal
treatment, a crown is fixed on the tooth to avoid breakage.
Tooth root sensitivities: 

This occurs when the bacterial toxins dissolves the bone around the roots.  The gum and the bone thin down and the roots are exposed.
 The tooth becomes extremely sensitive to cold, hot and sour foods.
Treatment:

Initially root sensitivity is treated with fluoride gels or special toothpastes.
Fluoride and minerals in these toothpastes and gels are absorbed by the outer layer of the roots. The roots become
stronger and less sensitive. Bonding agents are also applied to the roots to cover the sensitive areas. Root canal treatment
or the extraction is advised only if the inner living pulp tissue of the tooth is dead.
Cracked tooth syndrome: 
A tooth tends to break while biting hard things like hard candies, nuts, pencils etc.
Treatment:

The tooth is covered with crown made of gold and/or porcelain. Root canal is done when the crown doesn’t relieve the pain.
Bruxism and Temporomandibular  Joint Disorders:

Sometimes tooth cracks because of bruxism or Temporomandibular joint (TMJ) disorders.
Here the pain is felt in or around the ears or lower jaw.  Disorders in TMJ happen when there is injury in the face, arthritis and fatigue of jaw muscles.
 “Bruxism ” involves clenching or grinding the teeth which result in toothache.  Poor bite alignment, stress and family history are the factors for developing bruxism.
Treatment:
TMJ disorders are treated with oral anti-inflammatory medicines like ibuprofen or naproxen.
Stress reduction and eating soft foods which do not need much munching is recommended.
To safe guard the tooth from bruxism, the patient is advised to wear a bite appliance at night.
This is only to protect the tooth.
Impaction and eruption:

 Impaction is a condition where the tooth fails to come out into its proper place or stays under gum and/or bone.
There is pressure onto the teeth surrounded.
Treatment:

 Painkillers and antibiotics are given to treat this pain. Sometimes surgical removal
is also done. Wisdom teeth are known to cause this kind of toothache.
Sinus and toothache: 
Sometimes diseases and infection of ears and sinuses also cause toothache
A toothache may appear not from a dental condition but as a symptom of angina or heart attack.
Approaching a dentist as well as a physician will help determining the cause.
cartoon courtesy: cartoonstock.com

Blood clots

Blood clots:

Our heart pumps blood non-stop throughout our life. When we are hurt and start bleeding there is a natural mechanism in blood which makes the blood clot, so that we don’t lose excess blood.  These clots act as lifesavers by preventing blood loss. They also repair the damaged blood vessel and restore the smooth flow of blood.

Arteries carries blood to all parts of our body, and veins brings back the blood to heart. A blood clot can happen either in arteries or in veins.  When blood is not flowing smoothly due to some disorder, the blood tends to clot which leads to serious implications. The clot in arteries or veins stops the blood flow. This type of blood clot is called thrombus. When a blood clot of this kind is formed in a vein it is called Venous Thrombosis. Many people are unaware of venous thrombosis and don’t undergo any medical treatment. It is sad to note that thousands of people die of venous thrombosis.

Causes for blood clots: Unnatural clotting happens by various factors like obesity and  age (people are at more risk after 80 years).

Slow flow of the blood can cause clots. Even certain medications play a role in increasing the risk of forming arterial or venous clots.

Good news is that arterial clots can be treated by lifestyle changes and medications. Blood clots in arteries stop flow of oxygen and cause tissue damage. These clots are the main culprits in strokes and heart attacks. Blood clots if formed in the eyes cause permanent blindness.

Top Symptoms of Blood clot:

Symptoms depend on the type of the blood clot and the place where a blood clot is formed. In most cases the patients don’t feel any symptoms at all.

Blood clot in heart causes:

  •      Chest pain;
  •        Pounding sensation and stiffness in the chest;
  •         Irregular heartbeat;
  •     Unconsciousness or collapse;

Blood clot in brain causes stroke. When the left side of the brain is affected, speech impairment occurs. The patient experiences severe headaches, confusion, loss of balance and co-ordination.

Blood clot in surface veins causes no blockage or complications but inflammation, discomfort and pain.

Blood clots in arms are known as venous thrombosis. They show symptoms of swelling redness and pain in arm.

Blood clot formed in the leg (DVT) travels and gets lodged in the lung causing pulmonary embolism. The typical symptoms are shortness of breath even if the person is relaxed or taking rest, breathlessness, chest pain and bloody sputum.

Blood clots can occur while flying or travelling for a long time by train or car. Since the movement is restricted while travelling, people become vulnerable to develop clots. Even the couch potatoes are at risk of developing blood clots.

Blood clotting is a preventable disease. By changing lifestyle and taking precaution, even  if there is family history of blood clotting, this disease can be avoided. A good doctor should be able to guide his patients to prevent and safeguard oneself from this disease.

 

 

not published anywhere else.

சூரியனிடமிருந்து வைட்டமின் D பெறலாம்:

சூரியனிடமிருந்து வைட்டமின் D  பெறலாம்:

பொதுவாக பருவ காலங்கள் 4 என்பார்கள். ஆனால் சென்னையில் மூன்றே காலங்கள் தான்: வெய்யில், கடும் வெய்யில், கொளுத்தும் வெய்யில்! ஜனவரி கடைசி வாரத்தில் இருந்தே சென்னையில் வெய்யில் காலம் ஆரம்பித்து விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் சொல்லவே வேண்டாம். கத்தரி வெய்யில் நம்மைக் கதற அடிக்கும்.

குளிர் பானங்களும், ஐஸ் கிரீம்களும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும். எப்படி எப்படியெல்லாம் நம்மை சூரிய வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்று பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாக எழுதி நம்மை ஒரு வழி பண்ணி விடுவார்கள். நாமும் ஏ.ஸி. கார், ஏ.ஸி. ரூம் என்று வெயிலின் கொடுமையில் இருந்து ஓடி ஒளியப் பார்ப்போம். இதெல்லாமே தவறு.

ஆகவே, பெரியோர்களே, தாய்மார்களே நான் சொல்லவருவது யாதெனில், சூரிய ஒளி  நம் உடலுக்கு மிக மிக அவசியம்; அதனால் சூரிய ஒளியிலிருந்து தப்பிக்கப் பார்க்காதீர்கள்.  நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் D சூரிய ஒளியிலிருந்துதான் கிடைக்கிறது. சூரியனின் காலைக் கதிர்களும்  மாலையில் சூரியன் மறைவதற்கு முன் வெப்பம் தணிந்து இருக்கும் இளம் வெய்யிலும் நம் உடலுக்கு நல்லது.

இரண்டு வருடங்களுக்கு முன் இன்டர்நேஷனல் ஆஸ்டியோபோரோசிஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வின்படி கிராமத்தில் வசிக்கும் மக்களை விட நகரத்தில் இருக்கும் மக்கள் இந்த வைட்டமின் D குறைவால் அதிகம் பாதிக்கப் படுவதாகத் தெரிய வந்திருக்கிறது. மைசூரில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் சுமார் 67% தாய்மார்களுக்கு இந்த குறைபாடு இருப்பதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

வைட்டமின் D குறைவினால் முடக்கு வாதம், மூட்டு வீக்கம் multiple sclerosis, Crohn’s disease,  Systemic Lupus Erythematosus (SLE) முதலிய நோய்கள் வரக்கூடும். நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் விளைவாக பல தொற்று நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது.

வைட்டமின் D நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது. நம் எலும்புகள் வலிமை பெற கால்சியம் தேவை. நமக்குத் தேவையான கால்சியம் சத்து பால், மற்றும் பால் பொருட்களிலிருந்து கிடைக்கின்றன. சூரிய ஒளியிலிருந்து வரும் வைட்டமின் D யை நம் உடல் ஏற்றக்கொள்ள கால்சியம் சத்து தேவை.

நம் உடலில் வைட்டமின் D குறைந்தால் கால்சியம் சத்துக் குறைபாடும், இன்சுலின் உற்பத்தி குறைபாடும்  உண்டாகும். கால்சியம் சத்துக் குறைவால்  எலும்புகள் பலவீனம் அடைந்து  மிருதுவாகின்றன (oteomalacia). இன்சுலின்  உற்பத்திக்  குறைவால் டைப் 2 டயாபடிஸ் உண்டாகும்.

வைட்டமின் D குறைபாடு ஏற்படக் காரணங்கள்:

  • அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்ற நிலையும் தான் இந்தக் குறைபாடு ஏற்படக் கானனங்கள். வெய்யிலில் வெளியே போவதை யாரும் விரும்புவதில்லை. வீட்டிலும் ஏ.ஸி. அறைகள்; அலுவலகத்திலும் அதே வசதி. சூரிய ஒளி நம் மேல் விழுவதே இல்லை.
  • நமக்கு அதாவது இந்தியர்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் பழுப்புத் தோல், சூரிய ஒளியை அதிகம் உள்வாங்கிக் கொள்ளுவதில்லை. சூரியனிலிருந்து வெளிவரும் ultraviolet-d கதிர்கள் மூலம் நமக்கு வைட்டமின் D கிடைக்கிறது. நமது நிறமும் நமக்கு அனுகூலமாக இல்லை.
  • நமது சைவ உணவுப் பழக்கமும் வைட்டமின் D குறைய ஒரு காரணம்.

வைட்டமின் D யைப் பெறுவது எப்படி?

  • சூரியனின் இளம் கதிர்கள் நமக்கு வைட்டமின் D யைக் கொடுக்கின்றன.
  •  காலை 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அல்லது மாலை 4  மணியிலிருந்து   5 மணிக்குள்ளும் சின்னதாக ஒரு 20 நிமிட நடை நமக்குப் போதுமான வைட்டமின் D யைக் கொடுக்கும். நம் இரத்தத்தில் வைட்டமின் D குறைந்த பட்சம் 20 ml இருக்க  வேண்டும்.
  • கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) கால்சியம் சத்து நிறைந்தது. கீரை வகைகளும், மீன் எண்ணையும் வைட்டமின் D நிறைந்தவை.

குழந்தைகளுக்கு  ஒரு நாளைக்கு 400-600 IU வைட்டமின் D யும், பெரியவர்களுக்கு 600-800 IU வைட்டமின் D யும் தேவை.

வெய்யிலில் போனால் சருமம் கறுத்து (tan) ஆகிவிடும் என்று சொல்லுபவர்களுக்கு:     SPF- 30 சேர்ந்த சன்ஸ்க்ரீன் கிரீம் பயன்படுத்தலாம்.

கடுமையான வெய்யிலில் போனால் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும். சருமம் உலர்ந்து போவதைத் தடுக்கவும், கறுத்துப் போகாமல் இருக்கவும் முகத்திற்கு மட்டும் இந்தக் க்ரீமைப் பயன் படுத்துங்கள். உடலின் மற்ற பாகங்கள் அதாவது முதுகு, கைகள் , கால்கள் சூரிய ஒளியில் இருந்து வரும் இயற்கையான வைட்டமின் D யைப் பெறட்டும்.

சூரிய சக்தியினால் அடுப்பு, மின் விசிறிகள், மின் விளக்குகள் முதலியவற்றை மட்டும் இயக்க முடியும் என்பது இல்லை. நம் உடல் சரிவர இயங்கவும் சூரிய சக்தி தேவை. இளம் வெய்யிலில் நடந்தால் நமக்குத் தேவையான வைட்டமின் D யை இலவசமாகப் பெறலாம். சூரியக் கடவுள் கொடுக்க ரெடி. நாம் ரெடியா?

 

published in a2ztamilnadunews.com

நமது தேசிய கீதம்

நமது தேசிய கீதம் 

 எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

ஆந்திர மாநிலம சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்கிற ஊரில் கடந்த செவ்வாய்க் கிழமை சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் நமது தேசிய கீதத்தைப் பாடினார்கள். பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் மதனப் பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசொபிகல் கல்லூரி வளாகம். இங்கு தான் சம்ஸ்க்ருதம் கலந்த பெங்காலி மொழியில் இந்தப் பாடலை திரு.தாகூர் எழுதினார்.தியோசொபிகல கல்லுரியின் அப்போதைய முதல்வரும் திரு. தாகூரின் நண்பருமான ஜேம்ஸ் ஹெச். கசின்ஸ் (James H. Cousins) என்பவரின் மனைவி திருமதி மார்கரெட் கசின்ஸ் (இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்) பல வித மெட்டுக்களை போட்டுக் காண்பித்து கடைசியில் தாகூர் மனத்தைக் கவர்ந்த மெட்டில் இருப்பது தான் நாம் எல்லோரும் இப்போது பாடும் ‘ஜன கண மன’ பாட்டு. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த மெட்டு போடப்பட்டது.

 

1911ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தின் தத்வ போத பிரகாசிகை என்ற நூலில் திரு தாகூர் எழுதிய கவிதை தான் பிற்காலத்தில் நமது தேசிய கீதமாக மாறியது. முதல் முறையாக இந்தப் பாடல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27 ஆம் தேத பாடப்பட்டது. போன வருடம 2011டிசெம்பர் நமது தேசிய கீதத்திற்கு100 வயது ஆனது.

 

1911ஆம் வருடம் எழுதப் பட்டிருந்தாலும், இந்தப் பாடலின் ஹிந்தி மொழியாக்கம் பல ஆண்டுகள் கழித்து 1950 ஆம் வருடம் ஜனவரி 24 ம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் தேசிய கீதமாக தத்தெடுக்கப் பட்டது.

 

இந்தப் பாடலை திரு தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடமும் இதே மதனப் பள்ளி தான். மதனப் பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியோசொபிகல கல்லூரிக்கு ‘தெற்கு சாந்தி நிகேதன்’ என்றே திரு தாகூர் பெயரிட்டார். இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த தன் கைப்படஎழுதிய ‘ஜன கண மன’ பாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. திரு. தாகூர் இந்த ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு ‘The Morning Song of India’ என்று பெயரிட்டார்.

 

திரு. தாகூரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப் பாட்டின் முதல் பத்தி மட்டும் தேசிய கீதமாக இசைக்கப் படுகிறது. இதைப் பாடுவதற்க 52 வினாடிகள் ஆகும். முழுவதும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும் கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது. சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் நம் நாட்டின் தலை நகரமான புது தில்லி செங்கோட்டையில் நமது தேசியக் கோடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப் படுகிறது.

 

பிரபலமானவற்றைச் சுற்றி சச்சரவு எப்போதும் இருக்கும், இல்லையா? அதுபோல திரு. தாகூர் எழுதிய இந்த தேசிய கீதமும் பல சமயங்களில் சச்சரவுக்கு ஆளாகி இருக்கிறது.

இந்தப் பாடல் இயற்றப்பட்ட1911ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூடிய ஆண்டு. ‘பாக்கிய விதாதா’, ‘அதிநாயக’ என்ற சொற்கள் அரசரைப் புகழ்ந்து எழுதப் பட்டவை; கடவுளின் புகழ் இல்லை என்று சிலர் அப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சி அப்போது இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரை வரவேற்பதுதான். இந்த மாநாட்டைப் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடும் போது “வங்கக் கவி திரு ரவீந்திர நாத் தாகூர் இங்கிலாந்து அரசரை வரவேற்பதற்காக தான் இயற்றிய பாடலைப் பாடினார்” என்று குறிப்பிட்டிருந்தன.

ஆனால் திரு. தாகூர் அவர்கள் ஒரு சிறந்த தேச பக்தராகவே கருதப் பட்டார்.1919 இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின், தனக்குக் ஆங்கிலேய அரசால் (யாரைப் புகழ்ந்து பாடினார் என்று குற்றம் சாட்டப் பட்டாரோ அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால்)கொடுக்கப் பட்ட’சர்’ பட்டத்தையும் துறந்தார். இந்த சச்சரவுகளின் பின்னிலையில் திரு. தாகூர் 1937,1939 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய கடிதங்களில் தாம் கடவுளையே ராஜா என்று குறிப்பிட்டதாகவும், தன்னை குறை சொல்பவர்களின் அறிவின்மை பற்றி வருத்தப் படுவதாகவும் கூறுகிறார்.

‘ஜன கண மன’ பாடலில் குறிப்பிடும் ‘ராஜா’, ‘அரியணை’, ‘ரதம்’ போன்ற சொற்கள் பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பதாகவே திரு தாகூரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு குற்றச்சாட்டு:

‘ஜன கண மன’ வில் குறிப்பிடும் இந்திய பிரதேசங்கள் எல்லாம் அப்போதைய ஆங்கில அரசின் கீழ் இருந்தவை; மன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநிலங்களைப் (காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர்) பற்றி எதுவும் எழுதவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம், அரபிக் கடல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எல்லைப் பிரதேசங்களைப் பாடியதால், ஒட்டு மொத்த இந்தியாவையுமே தன் பாட்டில் சேர்த்திருக்கிறார் திரு. தாகூர்; ‘திராவிட’ என்பது தெற்குப் பகுதியையும், ‘ஜொலதித’ என்ற வார்த்தை கடல், மற்றும் சமுத்திரத்தைக் குறிக்கும் வடச் சொல் என்றும் பதில் அளிக்கிறார்கள் தாகூரின் ஆதரவாளர்கள்.

சாதாரண இந்தியன் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குடியரசு தினத்தன்று கிடைக்கும் இனிப்பை பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கிறான்.

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

published in a2ztamilnadunews.com

குளிர் காலத்தில் நம் செவிகளைப் பாதுகாப்பது எப்படி?

இப்போது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னாலும், இந்த மாதத்தின் குளிர் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அனேகமாக ஒத்துக்கொள்ளுவதில்லை.

பருவ நிலை மாறும்போது நம் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன.  அதீத குளிர், குளிர் காற்று, பனி இவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. குளிர் காற்று தரும் நடுக்கம் தவிர இந்த குளிர் கால நோய்களும் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. குளிர் காற்றினாலும் பனியினாலும் மூட்டு வலி, வீக்கம் முதலியவை வரக்கூடும்.

பனிக்கு நம் எலும்புகளில்  நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில் பல வலிகள் ஏற்படுகின்றன.

குளிர்ந்த காற்று நம் காதுகளைத் தாக்கும் போது ஒரு வகை வலியும் உண்டாவதால் பலருக்குக் குளிர் காலம் என்பது பயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தக் கட்டுரையில் குளிர் காலத்தில் நம் செவிப் புலனை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.

வெளியில் போகும்போது காதுகளை ஸ்கார்ப் அல்லது தற்போது கிடைக்கும் காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெதுவெதுப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்பட வழியில்லை.

பல சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். பால், மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவுகள், முட்டை, கோதுமை, சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட், சர்க்கரை, பீர் முதலியவை சேர்த்தப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது நாட்பட்ட காது தோற்று நோய்க்குக் காரணம். பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சளி மற்றும் கோழை உண்டாகக் காரணமாகின்றன.

இப்பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் இந்த தொற்று ஏற்படாமல் காதுகளைப் பாதுகாக்கலாம்.

குளிர் பிரதேசங்களில் வேலை செய்யும்போது, நம் உடம்பில் இரத்தம் உடலின் முக்கிய பகுதிகளுக்கு அதிகம் பாய்வதால் காதுகள், கைகள் முதலிய பாகங்கள் சில்லிடுகின்றன. அந்த சமயங்களில் காதுகளை மப்ளர் கொண்டு மூடி வெதுவெதுப்பாக வைத்திருக்கவும். கைகளை கிளவ்ஸ் போட்டு பாதுகாக்கலாம்.

குளிர் காலத்தில் வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம். இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித் தொற்று காதுகளை தாக்கும்.

குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். அப்படியே போகவேண்டும் என்ற சந்தர்ப்பம் வந்தால், காதுகளை பற்றிய விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் காதின்  உள்ளே புகுந்து செவிப் பறையை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் காதுகளில் வலியும், வீக்கமும் உண்டாகலாம். செவிப்பறையில் உண்டாகும் தொற்றினால் கேட்கும் திறனை முழுதுமாக இழக்கவும் நேரும். நீச்சல் வீரர்கள் காதுகளில் இருக்கும் நீரை நன்கு வெளியேற்ற வேண்டும்.

பொதுவான பாதுகாப்பு:

குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம்.

காதுகளில் அழுக்கு சேர்ந்து விட்டால், நீங்களாகவே இயர் பட்ஸ் (ear buds) கொண்டு சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

காதுகளின் கேட்கும் திறன் போய்விட்டால், மறுபடி சரி செய்ய முடியாது. நினைவிருக்கட்டும்.

சில தாய்மார்கள் சிறு குழந்தைகளுக்குப் பாலுட்டும்போது காதுகளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பின் அல்லது தலையில் போடும் ஹேர் பின்னை காதுகளில் நுழைப்பது உண்டு. இது மிகவும் தவறான பழக்கம்.

காதுகளில் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணத்திற்கு சில வழிகள்:

தலைக்குக் கீழ் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்துக்கொண்டு படுக்கவும். உட்கார்ந்த நிலையில் தலையை சாய்க்காமல் இருந்தால் காதுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

சுயிங்கம் மெல்லுவதால் வலி குறைவதுடன், தொண்டை அடைப்பும் நீங்கும்.

சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும்.

குளிக்கும்போது காதுகளில் சிறிது பஞ்சு வைத்து கொண்டு நீர் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.

காதுகளுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கொண்டு காதுகளை சுத்தம் செய்யவும். வெதுவெதுப்பான ஜாதிக்காய் எண்ணையை காதுகளைச் சுற்றி தடவவும்.

காதுகளில் வலியோ, குடைச்சலோ அல்லது அரிப்போ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவருடன் பேசுவதால் அனாவசியமான பயங்கள் விலகும். தக்க சிகிச்சையும் கிடைக்கும்.

காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவை. இந்த மூன்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம். அதனால் இதற்கு என்றே இருக்கும்  ENT (Ear, nose, throat) மருத்துவர்களை நாடவும்.

உடலின் எந்தப் பகுதி பாதிக்கப் பட்டாலும் சிரமம் தான். ஐம்புலன்களில் ஒரு புலன் சரியாக வேலை செய்யவில்லையானாலும் வாழ்க்கையே பாரமாகிவிடும். எந்த வலியானாலும் நாமாகவே சுயச் சிகிச்சை செய்து கொள்ளாமல் மருத்துவரை நாடுவது நல்லது.

 

published in a2ztamilnadunews.com

அனீமியா என்னும் இரத்தசோகை நோய்

அனீமியா என்னும் இரத்தசோகை நோய்

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.

இரத்த சோகை நோய் என்பது என்ன?

நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:

HB % அதிக பட்சம்….. 14.08 gm %

ஆண்கள  ……………………….       13.00 gm %

பெண்கள்     ………………………    11.00 gm %

கர்ப்பிணி பெண்கள் ……………    10.00 gm %

குழந்தைகள்   ………………………….  12.00 gm %

பள்ளி செல்லும் வயதினர் …  12.00 gm %

முதியோர்கள்                10.00 gm %

இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.

இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி  ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும்  பாதிக்கப்படுகிறது.

மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.

இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.

இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.

இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:

பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.

எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.

எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.

இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

published in a2ztamilnadunews.com

Symptoms of Snoring

Top 7 symptoms of snoring

Vibration in our vocal cord helps us form some sounds and we call it as speech. Likewise, while we sleep, airflow causes our nose and throat tissues to vibrate. But the sound comes out of this vibration is not very sweet like our speech but rough and throaty. We call this sound as snoring. Snoring happens when our breathing is hindered while we’re sleeping.

Everyone snores occasionally but when it affects our sleep, then it becomes a concern not only for the person who snores but for the whole family. Sleepless nights or inadequate sleep result in irritability and extreme tiredness in the day time.

Men snore more than women. 25% of the snorers are habitual snorers.

Whenever the airways are narrowed down or blocked, the snoring starts. The main contributors are:

Mouth breathing:        

People who have obstruction in their nasal passages breathe through their noses. The obstruction is caused by allergies, sinus infections, tonsils, swollen turbinate. People who breathe through their mouths are called ‘mouth breathers’. Most of them snore because of the airflow through the mouth vibrates the tissues.

The soft palate is a flap of tissue in the back of the mouth. It opens when we breathe through our nose and closes while we swallow food to allow food entering in the esophagus or the food pipe. If it is too long or floppy, then it vibrates and cause snoring.

The uvula is situated at the back of the soft palate. It if is abnormally long or thick, can also cause snoring.

Narrowed airways

When we have throat infection, the tonsils swell.  They don’t return to their original size even after the infection is treated. They remain swollen and can narrow the airways and cause snoring.

The tongue:

For some people the base of the tongue is large and so it narrows the airway. In some other cases the tongue slips backwards narrowing the airways. These actions lead to snoring.

Stages of our sleep: 

While sleeping we go through many stages. However, they are classified into two groups; one is REM (rapid eye movement) and another is non-REM. Though people snore in all the stages, it is commonly noted that we snore more in REM stage. During this REM stage, our brain signals all the muscles to relax except breathing muscle. While relaxing, the tongue, palate and throat collapse and narrow down the airway which in turn produces snoring.

Sleeping posture: Snoring occurs when we sleep on our back.  Our body tissues are pulled by the gravity. What happens with the tissues of pharynx is, since they are soft and floppy, gravity pulls the palate, tonsils and tongue backwards. So the snoring occurs. By making the snorer to role onto his/her side, the snoring can be lessened.

There are some other factors that are common causes of snoring:

Age, body structure, nasal and sinus problems, obesity, intake of alcohol and smoking cause snoring in general

Symptoms of snoring:

  • Daytime sleepiness – :  Snorers don’t get a complete sleep. Their sleep is disturbed many times.  They wake up many times to change their sleeping posture. Otherwise, they are woken up by their partners not to snore or snore with less noise. So they feel sleepy during the day time. They fall asleep during the meals or while watching TV
  • Sore throat: most of the snores sleep with their mouth open to get enough air or to ease the airway and thus, experience a dry throat.  Sometimes sore throat wakes them up from their sleep and deprives them enough sleep.
  • Relationship problems: When your partner snores, it is understandable that you too don’t get enough sleep. Your sleep is also disturbed. You become irritated and start commenting about your partner’s noisy, intolerable snoring spells. Or you choose to go to another room to sleep. This certainly hurts your partner and there is a friction in the relationship.
  • Restless sleep: There is lots of movement in the bed at night because snoring prevents you from getting a deep sleep. You adjust your sleeping position, or you feel sore throat and experience restless sleep.
  • Trouble concentrating: Since there are many sleepless night, concentration becomes a concern.
  • High blood pressure: Sleepless nights, daytime sleepiness result in irritability and not getting enough sleep makes you prone to high blood pressure.

Sleep apnea is a sleep disorder, wherein many pauses in breathing and low breathing occur while a person is sleeping. Pause in breathing is called apnea and low breathing is known as hypopnea. Sometimes the breathing is stopped completely and there is a 4% drop in oxygen in the blood.

Sleep apnea should be diagnosed and treated properly. Otherwise complications like hypertension, heart attack, irregular heart rate, pulmonary hypertension or even death.

Talk to your doctor and get some help to lower your snoring sound  and beware of the complication that your snoring may lead to.

not published anywhere else