நிறம் பிரித்து அறிய இயலாமை (கலர் பிளைன்ட்னெஸ்)
நோய்நாடி நோய்முதல் நாடி 11
ஒரு முறை என் உறவினருடன் இங்குள்ள ஆயுர்வேத கண் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு சோதனையாக செய்துகொண்டு வந்த மருத்துவர் ஒரு அட்டையை அவரிடம் கொடுத்தார். அதில் பல நிறங்கள் கொண்ட ஒரு வட்டம் இருந்தது. ஒவ்வொரு நிறமாக பெயர் சொல்லச் சொன்னார் மருத்துவர். ரொம்பவும் யோசித்து யோசித்து சொன்னார். சில நிறங்களை அவரால் சரியாக சொல்லவும் முடியவில்லை.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
இந்த நிறமறியா நோய்க்கான பரிசோதனைகளை கண்டுபிடித்தவர் திரு ஷிநோபு இஷிஹரா (Shinobu Ishihara – 1879-1963) இவர் ஜப்பானிய கண் மருத்துவர். மிலிட்டரி மருத்துவப் பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கையில் ராணுவப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். வண்ண வண்ண புள்ளிகள் கொண்ட 32 தகடுகளை உருவாக்கினார்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
நிறமறியா நோய்க்கு குணம் உண்டா? இதைத் திருத்த முடியுமா? என்ற கேள்விகளுக்கு போன வருடம் வரை இல்லை, முடியாது என்பதே பதிலாக இருந்தது. ஜீன் சிகிச்சை ஒன்றே வழி, அது நம் மருத்துவ சாமார்த்தியங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இதெல்லாமே கூடிய விரைவில் மாறும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது. அணில் குரங்கு (Squirrel Monkey) வகையைச் சேர்ந்த இரண்டு குரங்குகளுக்கு ஊசி மூலம் திசுக்கள் செலுத்தப்பட்டு முடிவும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
நாற்பது வயது என்பது நம் எல்லோர் வாழ்விலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன், ஐம்பது வயது என்பது வாழ்க்கை முடியும் நிலை என்றிருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இந்தக் காலத்தில் ஐம்பது வயதை நடு வயது என்கிறார்கள். மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், தொழில்நுட்பத் துறை முன்னேற்றங்கள் பலவற்றிற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
பல வருடங்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வைத்திருந்தார். காலையில் செய்தித்தாள் வந்தது. சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார். செய்தித்தாள் கிட்டத்தட்ட அவரது கைகள் எவ்வளவு நீளுமோ அத்தனை தூரத்தில் இருந்தது. ‘என்ன இவ்வளவு தூரம் வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள்?’
‘இல்லையே, சரியாத்தான் வைச்சுண்டு படிக்கிறேன்…!’
‘டாக்டர் கிட்டே போய் செக்கப் பண்ணிக்குங்க. வெள்ளெழுத்து வந்திருக்கும்’ என்றேன்.
‘சேச்சே! அதெல்லாம் இருக்காது. எனக்கு நன்றாக படிக்க முடியறதே!’
‘ஆனால் எவ்வளவு தூரத்தில் வைத்துப் படிக்கிறீர்கள், பாருங்கள்…’
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
கண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – தடுக்கும் முறைகள்
சின்ன வயதில் ஸ்ரீரங்கம் போகும்போது கரி எஞ்ஜின் ரயிலில் தான் போவோம். அதுவும் பாசெஞ்ஜெர் வண்டி. ஒரு ஸ்டேஷன் விடாமல் நின்று நின்று – ஏன், யாராவது கை காண்பித்தால் கூட – நின்று ஏற்றிக்கொண்டு போகும். வெளியில் எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டு வருவோம். ஒவ்வொருமுறையும் கண்களில் கரி விழும்.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சோம்பேறி கண் எனப்படும் பார்வை தெளிவின்மை (amblyopia)
ஒருநாள் பக்கத்துவீட்டிற்கு சென்றபோது அவர்கள் குழந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. ஒரு கண்ணிற்கு மட்டும் ஒரு பிளாஸ்டர் போட்டு மறைத்திருந்தது. ‘என்ன ஆச்சு? கண்ணில் அடிபட்டு விட்டதா?’ என்றேன் கொஞ்சம் படபடப்புடன். 6 வயதுப் பிள்ளை. கொஞ்சம் வால் என்றாலும் கண் ஆயிற்றே!
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
என் தோழியின் மகன் தனது பள்ளியில் கொடுத்திருந்த ஒரு craft வேலையை செய்து கொண்டிருந்தபோது அவனது தங்கை ஓடிவந்து அண்ணாவின் மேல் விழ, அவன் கையில் இருந்த ஊசி அவள் கண்ணினுள் போய்விட்டது! நல்லவேளை, உடனடியாக சிகிச்சை கொடுத்ததால் கண் பார்வை காப்பாற்றப்பட்டது.
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
நாம் தெருவில் நடந்து போகும்போது, அல்லது போக்குவரத்து நிறைந்த சாலைகளைக் கடக்கும் போது நமக்குப் பக்கத்தில் யாராவது பார்வையிழந்தவர்கள் இருந்தால் கைபிடித்து அழைத்துக் கொண்டு போவோம். அதற்கு மேல் என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி உதவுவது என்று நாம் யாரவது நம் எல்லையைத் தாண்டி சிந்தித்திருக்கிறோமா?
தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
ஒருமுறை ஏற்காடு போயிருந்தோம். கிளிமூக்கு அருவிக்குப் போகிற வழி ஏற்ற இறக்கமாக, ரொம்பவும் செங்குத்தாக இருந்தது. நாங்கள் நடக்கத் தடுமாறுவதைப் பார்த்த ஒருவர் சொன்னார், ‘ஒரு மரக்கிளையை ஒடித்து அதை ஊன்றிக் கொண்டு நடங்கள். சமநிலை தவறாது’ என்று. ஊன்றுகோல் வைத்துக்கொள்ள அவர் சொன்ன காரணம் கொஞ்சம் வியப்பாக இருந்தது. கையில் ஆளுக்கு ஒரு கோல் வைத்துக் கொண்டு நடந்தபோது தான் அவர் சொன்னது ரொம்பவும் சரி என்று புரிந்தது.
தொடர்ந்து படிக்க அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.