நோய்நாடி நோய்முதல்நாடி

இந்தத் தலைப்பில் நான்குபெண்கள் தளத்தில் நான் எழுதும் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளின் இணைப்பை கொடுத்திருக்கிறேன். இது நான்குபெண்கள் தளத்திற்காக பிரத்யேகமாக நான் எழுதும் கட்டுரைகள். இங்கு எனது தளத்தில் இவற்றை முழுமையாகப் பிரசுரிக்க இயலாது. என் தளத்திற்கு வருபவர்கள் இணைப்பை சொடுக்கி இந்தக் கட்டுரைகளை வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி!

 

நலம் வாழ…… முன்னுரை

போன மாதம் தும்கூர் போயிருந்தேன். கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் போனேன். கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி. மருத்துவ மணிக்குள்ளேயே இருந்த  மருந்துக் கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!

 

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

நோய்நாடி  நோய் முதல் நாடி – 2  26.6.2013 தலைவலி

எனது முன்னுரையில் ‘தனி மனிதனின் ஆரோக்கியம் அவன் வாழும் சமுதாயத்திற்கு அவன் தன்னை சார்ந்த சமூகத்திற்குச் செய்யும் உதவி’ என்று சொல்லியிருந்தேன்.

ஒருமுறை ஆரோக்கிய பாரதம் (பொதிகை தொலைக்காட்சி தினமும் மாலை 7.30 மணியிலிருந்து 8 மணி வரை) நிகழ்ச்சியில் மருத்துவர் ஒருவர் காச நோய் பற்றிப் பேசும்போது சொன்னார்:

‘காச நோய்க்கான மருந்துகளை தவறாமல் மருத்துவர் குறிப்பிடும் நாள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நோயை மறுபடி அண்டவிடாமல் செய்ய முடியும். ஆனால் உண்மையில் நோயாளிகள் அப்படிச் செய்வதில்லை.

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

 

நோய்நாடி நோய் முதல் நாடி…3  3.7.2013

ஒரு நாள் காலங்கார்த்தால ஒரு தொலைபேசி. “மாமிக்கு ரொம்ப மூச்சு விட முடியல. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. மாமியை வெண்டிலேட்டர்ல போட்டுருக்கா”

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

நோய்நாடி நோய்முதல் நாடி – 4 10.7.2013

தலைவலிக்கும் பிற உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் நாம் பார்க்கப்போவது கண்ணுக்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு.

  • கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பது;
  • குறைந்த வெளிச்சத்தில் படிப்பது; அதிக வெளிச்சமும் கண்ணுக்கு நல்லதல்ல;

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

நோய்நாடி நோய்முதல் நாடி – 5

தலைவலி: மனதைச் சார்ந்தது

சென்றவாரம் ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் ‘சித்த வைத்தியத்தில் சருமப் பராமரிப்பு’ என்பது பற்றி ஒரு மருத்துவர் பேசியபோது ஒரு கருத்தை முன் வைத்தார். ‘சருமப் பராமரிப்பு பற்றி வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி அதில் காட்டும் கிரீம்களை வாங்குவதில் செலவழிக்கும் பணத்தில் பாதியை நல்ல உணவுகள் சாப்பிடுவதில் செலவழித்தால், இந்தக் க்ரீம்களுக்கு வேலையே இருக்காது. வெளிபூச்சு எத்தனை பூசினாலும் சருமத்திற்கு பளபளப்பு என்பது உள்ளிருந்து வருவது’ மருத்துவரின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 6

நமது மருத்துவக் கட்டுரைத் தொடரில் அடுத்த உறுப்பைப் பற்றிப் பார்க்கும் முன், நேற்று நான் படித்த இரண்டு செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

இரண்டு செய்திகளுமே நாம் நமது ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கவனம் கொடுப்பதில்லை என்பதை சொல்லுகின்றன.

முதல் செய்தி:

11 வயது சிறுமிக்கு அதிக உடல் பருமனைக் குறைக்கும்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

திக்கென்றது இதை படித்தவுடனே. இவள் தான் மிகக் குறைந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவள் என்று வேறு போட்டிருந்தார்கள்.

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

நோய்நாடி நோய்முதல் நாடி – 7

பிள்ளை உறங்காவில்லி தாசர் என்று ஒருவர். தன் மனைவியின் கண்ணழகில் மயங்கி அவளையே சுற்றிச்சுற்றி வந்து ஊராரின் கேலிக்கு ஆளானார். ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் காவிரிக் கரையில் தன் சிஷ்யர்களுடன் அமர்ந்திருந்த போது, தாசர் தனது மனைவிக்கு வெயில் படாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டு அவளது கண்களையே பார்த்துக் கொண்டு செல்வதை கண்டார். அவரை திருத்திப்பணி கொள்ள நினைத்து அவரை அழைத்து அவர் செய்யும் செயலுக்குக் காரணம் கேட்டார்.

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

நோய்நாடி நோய்முதல் நாடி – 8

ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம். அதையொட்டிய சிறப்புப் பதிவு இது.

ஒரு பெரிய பணக்காரர். 71 வயதானாலும் திடகாத்திரமாக, நோய்நொடி எதுவுமில்லாமல் வாழ்ந்து வந்தார். திடீரென்று அவருக்குத் தான் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. தான் இனிமேல் ரொம்ப காலம் இருக்க மாட்டோம் என்கிற பயம் அவரை ரொம்பவும் துன்புறுத்தியது. ஒரு மன நல மருத்துவரை அணுகினார். அவர் சொன்ன ஒரு வாசகம் இவருக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. இவருடைய பயங்களையும் போக்கிற்று.

அந்த வாசகம் தான் ‘உங்கள் உடல் இறப்பினால் மடிய வேண்டியதில்லை’

இதைத்தான் ‘உறுப்பு தானம்’ என்கிறார்கள் மருத்துவத் துறையில்.

உறுப்பு தானம் என்றால் என்ன?

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 9

‘பறவையை கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்..’

என்று பாடிக் கொண்டே போகும்போது மனிதன் மட்டும் பிற பொருட்களைப் பார்த்து மற்றவற்றை படைத்தானா? இறைவனின் மிகச்சிறந்த படைப்பான மனிதனிடமிருந்து எதுவுமே உண்டாகவில்லையா என்ற கேள்வி எழுகிறது, இல்லையா?

ஏன் இல்லை? நம் கண்களைப் பார்த்துத்தான் கேமிரா படைக்கப்பட்டது என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 10

கண்கள் எப்படி வேலை செய்கின்றன?

மனிதக் கண்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே காமிராவும் வேலை செய்கிறது. நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் (ஆகிஸிபிடல் கார்டெக்ஸ் பகுதி) செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது.

தொடர்ந்து படிக்க அடுத்த பக்கத்திற்கு செல்லவும்

 

 

2 thoughts on “நோய்நாடி நோய்முதல்நாடி

  1. மூன்று மாத குழந்தை மலம் கழிக்க சிரமப்படுது என்ன செய்வது?

    1. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் தானாகவே சரியாகிவிடும். ஒருவேளை, புட்டிப்பால், அல்லது கஞ்சி போல கொடுக்க ஆரம்பித்திருந்தீருக்கிறீர்கள் என்றால் அதையும் நீராகவே கொடுங்கள். நடுநடுவில் ஒரு ஸ்பூன் காய்ச்சி ஆறிய நீர் கொடுத்து வாருங்கள். மருந்துக் கடைகளில் அல்லது உலர்ந்த பழங்கள் விற்கும் கடைகளில் பெரிய உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். மூன்று அல்லது நான்கு பழங்களை இரவு சுடு தண்ணீரில் ஊறப்போட்டு காலையின் நன்றாகக் கையால் கசக்கி விட்டு சக்கையை எடுத்து விடுங்கள். அந்தத் தண்ணீரை இளம் சூடு பண்ணி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் கொடுத்து வாருங்கள். தொடர்ந்து ஒருவாரம் இப்படிச் செய்ய குழந்தை எளிதில் மலம் கழிக்கும். விரைவில் குழந்தைக்கு சங்கடம் தீர எனது பிரார்த்தனைகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s